நமது யூனிட் 747 சார்பாக நமது முகவர்கள் அனைவரையும் இந்த பிளாக்கின் மூலமாக வரவேற்று மகிழ்கிறேன். நமது யூனிட் சார்ந்த எனதருமை முகவர் பெருமக்களின் முன்னேற்றத்தில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் முயற்சிகளில் மேலும் ஒரு அடித்தளமாக இந்த பிளாக்கை பயன்படுத்தப் போகிறேன். நமது எல் ஐ சி சார்ந்த தகவல்கள், இன்சூரன்ஸ் திட்டங்களின் விபரங்கள், அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் படிவங்கள், மற்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாடுகள், இன்சூரன்ஸ் செய்திகள், நமது யூனிட்டின் மாதாந்திர முகவர் தர வரிசை பட்டியல், சிறப்பாக பணியாற்றும் முகவரை சிறப்பிக்கும் செய்திகள் ஆகியவை இடம் பெற உள்ளன. மேலும், இன்டர்நெட்டில் லைஃப் இன்சூரன்ஸ் குறித்த தகவல்களைப் பெறும் முறைகள் குறித்தும் தகவல்கள் வெளியிட உள்ளோம். கால மாற்றங்களுக்கேற்ப அனைத்து முகவர்களும் தகவல் புரட்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு இன்சூரன்ஸ் வணிகத்தில் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.
இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி கொண்டோர் தினசரி இந்த வெப் தளத்திற்கு வருகை தந்து இதில் தரப்படும் தகவல்களை பயன்படுத்தி புதிய பாலிசிகள் விற்பனை மற்றும் சேவையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.
வாழ்க எல் ஐ சி ! வளர்க பாரதம்!
No comments:
Post a Comment